திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் இருக்கும் விராலிப்பட்டியில் அமைத்து இருக்கும் கோட்டை கருப்பண்ணசாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஒரு நாள் திருவிழா நடைபெறும்.
இப்படி நடக்கக்கூடிய திருவிழாவுக்காக பக்தர்கள் நேத்தி கடனாக வேண்டி ஆடுகளை வருடம் முழுவதும் இந்த கோட்டை கருப்பண்ணசாமிக்கு விட்டு வந்தார்கள். இப்படி நேத்தி கடனாக விட்ட ஆடுகளே 3500 இருந்தது. அதோடு இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் திருவிழாவுக்கு மட்டும் 1000 ஆடுகள் நேத்தி கடனாக பக்தர்கள் கொண்டு வந்ததை சேர்ந்து 4500 ஆடுகளையும் கோட்டை கருப்பணசாமிக்கு வெட்டி பக்தர்களுக்கு விருந்து வைத்தனர்.
அதோடு மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிலும் இருந்தும். மதுரை, தேனி போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த பக்கதர்களுக்கு கறியை பிரசாதமாகவும் கொடுத்தனர். இந்த கறி விருந்தில் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் ஆண்களுக்கு மட்டுமே கறி விருந்து வழங்குவது வழக்கம். அந்த ஒரு நாள் இரவு மட்டும் பெண்கள் சாப்பிடவோ, சாமி கும்பிடவோ வர மாட்டார்கள். அப்படி ஒரு நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்தகோட்டை கருப்பண சாமியிடம் வேண்டுவோருக்கு வேண்டிய வரம் கொடுப்பதால் பக்தர்களும் பெரும் திரளாகவே கலந்து கொண்டனர். அதுபோல் வருடம், வருடம் இந்த ஒரு நாள் திருவிழாவுக்கு அமைச்சர் சீனிவாசன் வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வந்த அமைச்சர் சீனிவாசனை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். அதை தொடர்ந்து அமைச்சர் சீனிவாசனும் கோட்டை கருப்பண்ணசாமியை தரிசித்து விட்டு சென்றார்.