Published on 06/05/2019 | Edited on 06/05/2019
சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ளது, ரூபி நகைக்கடை. இந்த நகைக்கடை மீது இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளனர்.

தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து ரூபி நகைக்கடை மீதான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளனர், தொடர்ந்து விசாரித்தும் வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் எனக்கூறி 500 கிலோ நகைகள் மற்றும் 150 கோடி ரொக்கம் ஆகியவை மோசடி செய்யப்பட்டதாக புகாரளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.