Skip to main content

ரூ.10-ஆயிரம் மருமகளுக்கு ஜீவனாம்சம் வழங்க ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
ரூ.10-ஆயிரம் மருமகளுக்கு ஜீவனாம்சம் வழங்க ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

கோவை மாநகர எல்லையில் உள்ள பீளமேடு, ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஏழாவது குறுக்குத் தெருவை வீதியை சேர்ந்தவர் இராமசாமி. ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர். இவருடைய மகன் கோபிநாத்திற்கும், வடவள்ளி பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், 2008ல் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின்போது, கார்த்திகாவின் பெற்றோர் அவருக்கு, 110-பவுன் நகையுடன் ஒரு கிலோ வெள்ளி, வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் கார் ஆகியவை வரதட்சணை கொடுத்தனர். இவர்களுக்கு சுவர்ணிகா என்ற குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு கோபிநாத் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, குடும்ப பிரச்சனை காரணமாக கார்த்திகா தன்னுடைய குழந்தை சுவர்ணிகா எடுத்துக்கொண்டு கோபிநாத்தின் தந்தை வீட்டைவிட்டு வெளியேற்றி தன்னுடைய தந்தை வீட்டுக்கு சென்றார்.

இதற்கிடையில், கோபிநாத் நடத்தி வந்த மொபைல் கடையை, 26 லட்சம் ரூபாய்க்கு விற்ற இராமசாமி, அதில் கிடைத்த பணத்தை கார்த்திகாவிற்கு கொடுக்கவில்லை. இவருக்கு சேர வேண்டிய பொருட்களையும் திருப்பி கொடுக்கவில்லை. திருமணத்தின் போது கணவர் வீட்டுக்கு கொண்டு சென்ற சீர்வரிசை பொருட்களையும் இராமசாமி திருப்பி கொடுக்கவில்லை.

இதனால், பாதிக்கப்பட்ட கார்த்திகா தனக்கு சேரவேண்டிய பொருட்களை பெற்று கொடுக்குமாறு கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தையின் கல்வி செலவுக்கு மட்டும் பணம் கொடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கார்த்திகா மேல்முறையீடு செய்தார்.

வழக்கு விசாரணை முடிவில், நீதிபதி கிறிஸ்டோபர் அளித்த தீர்ப்பில், 'கார்த்திகா, குழந்தை சுவர்ணிகா ஆகியோர், கோபிநாத்திற்கு சொந்தமான வீட்டில் வசிக்கலாம்; இருவருக்கும் மாதம் தலா 10 ஆயிரம் ரூபாய் கோபிநாத்தின் தந்தை இராமசாமி வழங்க வேண்டும். என்று நேற்று தீர்பளித்தார்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்