Published on 22/11/2023 | Edited on 22/11/2023
சிதம்பரத்தில் பழமை வாய்ந்த தில்லை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கோவிலில் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள 5 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை என்னும் பணிகள் நடைபெற்றது.
இதில் இந்து அறநிலையத்துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன், கோவில் ஆய்வாளர் நரசிங்க பெருமாள், கோவில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் வங்கி அலுவலர்கள் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணினார்கள். இதில் ரூ 5,31,288 மற்றும் 19 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி வெளிநாட்டு நாணயங்கள் சிங்கப்பூர் டாலர் 10, மலேசியா ரிங்கட் 1, அமெரிக்க டாலர் 2 உள்ளிட்டவை இருந்தன. இந்தக் காணிக்கைகள் வங்கியில் செலுத்தப்பட்டது.