Skip to main content

"உணவுத்துறையில் மாதம் ரூபாய் 50 கோடி அரசுக்கு மிச்சம்"- அமைச்சர் சக்கரபாணி பேச்சு!!

Published on 10/04/2022 | Edited on 10/04/2022

 

"Rs 50 crore left for the government in the food sector per month" - Minister Chakrabarty speech !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கையை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான பொதுக்கூட்டம் இன்று (10/04/2022) நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியை நடத்தி, பெண்கள் நலனில் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு கட்சி பாரபட்சமின்றி 234 தொகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. 

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியைப் போல் இல்லாமல் 110 விதியின்படி சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். நத்தத்தில் அரசுக் கல்லூரி அமைக்கப்டும். காலியாக உள்ள 64,000 சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 

 

உணவுத்துறையில் கடந்த கால ஆட்சியில் இருந்த பல்வேறு குறைபாடுகளை நீக்கி, மாதம் ரூபாய் 50 கோடி மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் மக்கள் பணி செய்து மக்கள் மனங்களை வெல்ல வேண்டும்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்