தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகளை வெளிசந்தையில் விற்று ரூ.5 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக ஈரோடு கூட்டுறவு சங்க மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னிமலை விசைத்திறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் கடந்த 2017 ஜூலை முதல் நவம்பர் வரை தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகளை வெளிசந்தையில் விற்று ரூ.5 கோடிக்கும் அதிகமாக கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கைத்திறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர், பிச்சைமுத்து வணிக குற்றவியல் புலணாய்வு பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கூட்டுறவு சங்கமேலாளர் செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.