Skip to main content

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி;  காப்பு போட்ட காவல்துறை

Published on 07/11/2024 | Edited on 07/11/2024
Rs 25 lakh fraud claiming to get government jobs;Backup Police

கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் ஓ.பி.எஸ் அணியில் நகர செயலாளராக உள்ளார். இவரிடம் கடந்த 2023 நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி அருள்முருகன் நகரச் சேர்ந்த கலீல் ரகுமான்(60) என்பவர் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழில் நிர்வாக இயக்குனராக உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பழக்கம் உள்ளது. இதன் மூலம் பல்வேறு துறையில் அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக கூறி அறிமுகமாகியுள்ளார்.

இதனை நம்பி தன்னுடைய மகளுக்கு இளநிலை உதவியாளராக அரசு வேலை வாங்கி தருவதற்கு ரூபாய் 15 லட்சத்து 92 ஆயிரம் களில் ரகுமானிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அரசு வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து புண்ணியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கடந்த மாதம் கலீல் ரகுமான் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகரைச் சேர்ந்த துரை(65) என்பவரிடம் கலீல்ரகுமான் என்பவர் தான் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிர்வாக இயக்குனர் என கூறி அறிமுகமாகியுள்ளார்.

உன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய துரை கடந்த நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 தவணைகளில் வங்கி மூலம் ரூபாய் 9 லட்சத்து 68,500 கலில் ரகுமான் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியுள்ளார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து வந்த கலீல் ரகுமானை கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்