Published on 05/06/2020 | Edited on 05/06/2020
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்தே இரு சக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்கள் மீது வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாஸ்க் அணியாமல் வாகனங்கள் சென்றதாக இதுவரை 42 ஆயிரத்து 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றதாக 1,160 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.