Skip to main content

வார்டு உறுப்பினரான ரவுடியின் மனைவி... பதவியேற்பு விழாவிலேயே கஞ்சா வழக்கில் கைது!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Rowdy's wife arrested in cannabis case at Ward member inauguration

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து பதவியேற்பு விழா என்பது நேற்று நடைபெற்றது.

 

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பதவியேற்க வந்த பிரபல ரவுடியின் மனைவியை கஞ்சாக்கடத்தல் வழக்கில் பதவியேற்பு விழா கூட்டத்தில் வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவர் விஜயலக்ஷ்மி. இவர் செங்கல்பட்டில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக்கூடாது, என் மனைவிக்கு ஊராட்சி மன்றத் துணை தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சிறையில் இருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 50 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலக்ஷ்மி நேற்று பதவியேற்க வந்த நிலையில், அவரை போலீசார் பதவியேற்பு விழா மேடையில் வைத்தே கைது செய்தனர். கஞ்சா கடத்தி விற்றுவந்தது தெரியவந்த நிலையில் அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்