சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்கும் நிகழ்வு பைசல் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் ராஜசேகரன் வரவேற்புரை நல்கினார். சாசனத் தலைவர் முஹம்மது யாசின், மூத்த உறுப்பினர்கள் சுப்பையா, விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் சீனுவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் மணி கலந்துகொண்டு இந்த ரோட்டரி ஆண்டின் தலைவராக ராஜசேகரன், செயலாளராக ரவிச்சந்திரன், பொருளாளராக கேசவன் ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வருங்கால ரோட்டரி ஆளுநர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். துணை ஆளுநர் தீபக்குமார், புதிய உறுப்பினர்கள் மருத்துவர் கிரிதரன், இந்தர் சந்த் ஜெயின், பவிக்,பழனியப்பன், விஜயபாலன் ஆகிய ஐந்து பேரைச் சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன், பழநி பாபு அணி வணிகத்தின் உரிமையாளர் பா. பழநி ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பில் ரூ 90 ஆயிரம் மதிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 3 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினார்கள். ரோட்டரி சங்கத்தால் தத்தெடுத்த மேல திருக்கழி பாலை கிராமத்தில் உள்ள நான்கு மகளிருக்கு தலா ஒரு ஆடுகள் வழங்கப்பட்டது.
மேலும் 3 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முருங்கை, கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் டேவிட் ஏகாம்பரம், பண்ணலால் ஜெயின், முத்துக்குமரன், யாசின், சாகுல் ஹமீது, சுனில் குமார் போத்ரா, சுசில் குமார் செல்லாணி, ஜினேந்தர், சௌரப் மனோட், ஸ்ரீவித்யா, நல்லதம்பி, புகழேந்தி, அருள், கரிகால் வளவன், வர்த்தக சங்கத்தின் பொருளாளர் சிவராம வீரப்பன், ஜெயராமன், லையன் சுப்ரீம் சங்கத் தலைவர் இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.