சென்னை தேனாம்பேட்டை ஸ்டார் ஹோட்டலில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டத்தின் ஆனைக்குடிக் கிராமத்தை சேர்ந்த ராக்கெட் ராஜா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய சென்னை போலீஸ் அவரை அங்கிருந்து கோவை சிறைக்கு மாற்றினார்கள்.
கோவை மத்திய சிறையிலிருந்த ராக்கெட் ராஜாவைக் கோவைப் பெருநகர போலீசார் இன்று காலை 12.45 மணியளவில் நெல்லைக்குக் கொண்டு வந்தார்கள். பி.சி.ஆர். நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரா முன்னிலையில் ராக்கெட் ராஜாவை ஆஜர் படுத்தினார்கள்.
நெல்லையின் பாளை நகரில் அண்மையில் நிலப்பிரச்சினைத் தொடர்பாக கொடியன் குளம் குமாரைக் கொலை செய்யும் நோக்கத்தில் வந்த கும்பல் ஒன்று அவர் தப்பியதால் ஸ்பாட்டில் இருந்த அவரது மருமகன் பேராசிரியர் செந்தில்குமாரைப் படுகொலை செய்தது. அந்த வழக்கில் ராக்கெட் ராஜா ஏ.1 அக்யூஸ்ட். அதன் விசாரணையின் பொருட்டு நெல்லை மாநகர போலீசார் ராக்கெட் ராஜாவைத் தங்கள் கஷ்டடியில் எடுக்க முயன்று வருகிறார்கள்.