22.02.2019ம் தேதி கூட்டேரிப்பட்டு டாஸ்மார்க் கடையின் விற்பனை முடித்து பணம் ரூ.1,15,363யை சரி பார்த்துக்கொண்டிருக்கும் போது 6 நபர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை காட்டி பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். டாஸ்மார்க் கடை ஊழியர்களான சங்கர், திருவேங்கடம், சோழன் ஆகிய மூவரும் கத்திக்கொண்டு ஓடியபோது கொள்ளையர்கள் மூன்று பேர் டாஸ்மார்க் ஊழியர் சங்கரை வெட்டியதாகவும் அவர் தன்னிடமிருந்த பணத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும், மற்ற மூன்று கொள்ளையர்களும் டாஸ்மார்க் ஊழியர் சங்கரின் நண்பரான சக்திவேலை விரட்டிச்சென்று அவரிடமிருந்த ரூ 46,000 ஆயிரத்தை பறித்து கொள்ளையடித்து அங்கிருந்து கொள்ளையர்கள் அனைவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக டாஸ்மார்க் மேர்பார்வையாளர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்திரவின் பேரில், திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது
.
அவர்களின் தீவிர விசாரணையிலும் தேடுதல் வேட்டையிலும், மேற்படி கொள்ளை கும்பலை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கி முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் கிடைத்து டாஸ்மார்க் ஊழியர்களை அழைத்துச்சென்று அடையாளம் காட்டி கேட்ட போது
கொள்ளை சம்பவத்தில் இவர்களும் இருந்தார்கள் என அடையாளம் காட்டியதால் அந்த இருவரையும் விசாரிக்க சென்னையைச் சேர்ந்த சீனுவாசன், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாலாஜி என தெரிய வந்தது. அதில் பாலாஜி மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சீனுவாசன் 24.02.2019 ம் தேதி மருத்துவ சிகிச்சை முடித்து வெளியே வரும் போது போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் மற்றொரு கொள்ளையன் அஜய்தேவன் என்பவரையும் கைது செய்து இருவரிடமிருந்தும் பணம் ரூ 15,000 கைப்பற்றியும் கொள்ளை சம்பவத்திற்கு பயன் படுத்திய அரிவாள், கத்தி மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான மூன்று எதிரிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.