Skip to main content

கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட 
 மாணவர் அமைப்பினர் கைது 

அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர் . 
 
கோவை காந்திபும் பகுதியில் புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி , பழனிசாமி பதவி விலக கோரியும் ,அனிதாவின் தற்கொலையை தவறாக பேசிய கிருஷ்ணசாமி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர . போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

-அருள் 
 

சார்ந்த செய்திகள்