திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் ஜமால் முகமது கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் திருச்சி மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சாலை விதிகளை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எப்படி பின்பற்ற வேண்டுமென்றும் தலைக்கவசம் அணிவது, வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது மற்றும் சிக்னல்களை கவனித்து பயணம் செய்வது போன்ற விழிப்புணர்வுகளைத் தங்களுடைய நாடகத்தின் மூலம் ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
முன்னதாக இந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மொய்தீன், பொருளாளர் ஜமால் முகமது, துணைச் செயலாளர் அப்துல் சமது கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.