Skip to main content

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்! - இந்திய தொழிலாளர் பேரவை ஆர்ப்பாட்டம்!

Published on 08/01/2018 | Edited on 08/01/2018
கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்! - இந்திய தொழிலாளர் பேரவை ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் கட்டுமானப் பொருட்களின் மீதான விலையேற்றமானது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், நேரடியாக கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கட்டுமானத் தொழிலும் இதே காரணத்தால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.



இந்நிலையில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துகடை பேருந்துநிலையத்தில் மணல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியதாக கூறி, இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

- து.ராஜா

சார்ந்த செய்திகள்