Published on 30/07/2019 | Edited on 30/07/2019
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கண்டித்தும், தமிழகத்தில் நிகழ்ந்துவரும் ஆணவக்கொலைகளை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இன்று(30.07.2019) காலை 10.30 மணியளவில் சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகே புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பலரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.