Skip to main content

அமலுக்கு வந்தது மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

 Restrictions on places of worship came into force!

 

தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 4,862-ல் இருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 6,939 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என 6,983 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கரோனா பாதிப்பு 6,983 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 3,759 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மற்றொரு கட்டுப்பாடான அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கட்டுப்பாடும் அமலுக்கு வந்தது.

 

ஒமிக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஒமிக்ரானை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒமிக்ரான் பாதிப்பு கடுமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்