தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி செயல்பட்டு வருகிறார். இவர் பதவியேற்றதில் இருந்து கட்சியில் உள்ள தலித் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என கட்சியினர், அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகளைக் கண்டித்து சிதம்பரம் நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையே தமிழக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து தலித் சமூகத்தை திட்டமிட்டு புறக்கணித்து வரும் சாதி வெறிபிடித்த கே.எஸ் அழகிரியை பதவிநீக்கம் செய், தமிழக காங்கிரஸ் கட்சி விற்பனைக்கு உள்ளது என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஒட்டிய போஸ்டர்களை கிழித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரின் சொந்த ஊரிலே கட்சியில் தலித் சமூகத்தைத் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார் தலைவர் என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.