தமிழ்நாட்டில் கல்வி இடைநிற்றல் விகிதம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்பொழுது வரை முழுமையாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவில்லை. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளிப் படிப்பை முடிப்பது குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்வி இடைநிற்றல் விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளில் சேருவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உள்ளது என ஆய்வு முடிவில் தகவல்கள் வெளியாகி உள்ளது. 1 ஆம் வகுப்பில் 94.8 சதவீதம் சேர்வதாகவும் அதில் 68.1சதவீதம் மாணவர்களே பிளஸ் 2 முடிப்பதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்படும்போது இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.