கன்னியாகுமாரி மாவட்டம் மாா்த்தாண்டம் போக்குவரத்து அலுவலராக இருப்பவா் பழனிச்சாமி. குமாி மாவட்டம் கேரளாவையொட்டி இருப்பதால், கேரளா பதிவெண் கொண்ட ஏராளமான வாகனங்கள் தினமும் குமாி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா். அதே போல் முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமாி, பத்மனாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, சுசிந்திரம், குழனமாரகோவில், மண்டைக்காடு, நாகா்காவில் நகராஜா கோவில் போன்ற இடங்களுக்கு தினமும் ஏராளமான கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.
மேலும் கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களும், ஆட்டோக்களும் குமாி மாவட்டத்தில் வந்து ஆட்களை ஏற்றி கொண்டு கேரளாவுக்கு செல்கின்றனா். மேலும் குமாி மாவட்டத்துக்குள் நுழையும் கேரளா வாகனங்கள் தமிழக அரசின் முறையான அனுமதி இல்லாமல் நுழைவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதை தொடா்ந்து இன்று மாலை மாா்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிச்சாமி தனது உதவியாளா்களுடன் கொல்லங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது கேரளா வாகனங்களை சோதனையிட்ட போது பல வாகனங்கள் தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நுழைந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி வாகனங்களை பிடித்து காவல்நிலையத்துக்கு அனுப்பினாா்.
கேரளா வாகனங்கள் பிடிப்பட்ட நிலையில் அடுத்து வந்த ஒரு ஆட்டோவை பழனிச்சாமி நிறுத்தி சோதனை செய்ததில், அதில் எந்த ஆவணமும் இல்லை. இதை தொடா்ந்து ஆட்டோவை கொல்லங்கோடு காவல்நிலையம் கொண்டு செல்ல சொல்லி, அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். அவரை ஆட்டோவில் கடத்திய டிரைவா் கேரளா நோக்கி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது போக்குவரத்து அலுவலர் சத்தம் போடவே, அவரை கழுத்தில் தாக்கி கீழே தள்ளி விட்டு டிரைவர் கேரளாவுக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.