Skip to main content

தஞ்சையில் விளையாட்டு வினையானது மாயமான மாணவன் பிணமாக உடல் மீட்பு

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
தஞ்சையில் விளையாட்டு வினையானது
மாயமான மாணவன் பிணமாக உடல் மீட்பு



தஞ்சாவூர் அடுத்த நாஞ்சில்கோட்டை, செந்தமிழ்நகரை சேர்ந்தவர் சிவக்குமார், மருந்து விற்பனையாளர். இவரது 2வது மகன் கிஷோர்(11) 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 23ம் தேதி முதல் விளையாட சென்ற கிஷோரை காணவில்லை. 

மகன் காணவில்லை என்று பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பெயரில் தமிழகபல்கலைகழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி கிஷோரின் தாய் கவிதாவிற்கு மா்ம நபர் போன் செய்துள்ளார்.  தொடர்ந்து பல முறை போன் வந்த தகவலை போலீசாரிடம் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த டிப்ளாமோ இரண்டாம் ஆண்டு படித்து வரும் அரவிந்த், 21, என்பது தெரியவந்தது. உடனை அவனை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். 

விசாரனையில் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார், விளையாட்டு விளையாடி கொண்டு கிஷோர் அவரை பார்த்துவிட்டு வீட்டில் சொல்லி விடுவேன் என கூறியதால், ஆத்திரமடைந்த அரவிந்த் கிஷோரை கழுத்து நெறித்துள்ளான். கிஷோர் வலியால் துடித்து மயங்கியுள்ளான். பயத்தில் அரவிந்த், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி குழியை தோண்டி புதைத்துள்ளான் என்பதை ஒப்புக்கொண்டான். மேலும், தனது வீட்டு அருகே புதைத்து இருந்த இடத்தையும் போலீசாரிடம் காண்பித்தான். இதை தொடர்ந்து இன்று மாணவன் புதைக்கப்பட்ட  இடத்திற்கு வந்த எஸ்.பி, செந்தில்குமார் தலைமையில் உடலை தோண்டி எடுத்து, மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சிகரெட் பிடிப்பதை பார்த்து வீட்டில் சொல்லிவிடுவேன் என்று கிஷோர் விளையாட்டாக சொன்னதால் ஆத்திரமடைந்த அரவிந்த் அவசரப்பட்டு கழுத்தை பிடித்து தூக்கியதால் ஒரு உயிர் பலியாகிவிட்டது. 

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்