Skip to main content

"ரேஷன் கடைகளுக்கும் எங்களிடம் கரும்பு வாங்குவதால் கூடுதல் சந்தோஷம்.." - விவசாயிகள் மகிழ்ச்சி!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

fh

 

தமிழர்களின் முக்கிய விழாக்களில் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் கரும்பும், பானையும் முக்கிய பொருளாக இடம் பெரும். இந்நிலையில் பொங்களுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிதம்பரம் அருகே உள்ள  வேளக்குடி, பழைய நல்லூர், சாலியன் தோப்பு உள்ளிட்ட பகுதியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு அனுப்புவதற்கு பன்னீர் கரும்பை அருவடை செய்து அனுப்பும் பணியில் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இத குறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், பழைய நல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டது. இந்தக் கரும்புகள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வியாபாரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.  தற்போது, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து விவசாயிகள் கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.  1 கரும்பு ரூ.12 ரூபாய்க்கும், ஒரு கட்டு கரும்பு ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகின்றன.  

 

பொங்கல் நெருக்கத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து கரும்புகளை வாங்கி செல்வர்கள். இந்த ஆண்டு தண்ணீர் போதிய அளவு சரியான நேரத்தில் கிடைத்ததால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் அதிக அளவிலான கரும்புகளை ரேசன் கடைகளில்  பொங்கலுக்கு கரும்பு வழங்க வாங்கி செல்வதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்