ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச்சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவமனை மற்றும் வீட்டில் பிறந்த குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போல் கொல்லிமலை பகுதி்யில் வழங்கப்பட்ட 1000 பிறப்புச்சான்றிதழ்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா, கடந்த 30 வருடங்களாக 3 முதல் 4.25 லட்சத்திற்கு குழந்தைகளை விற்றது அவரது ஆடியோ மூலம் அம்பலமானது. மேலும் அமுதா அந்த ஆடியோவில், குழந்தயை வாங்கித்தருவதோடு அல்லாமல் மேற்கொண்டு 70 ஆயிரம் கொடுத்தால் குழந்தை உங்களுக்கே பிறந்தது மாதிரி ராசிபுரம் நகராட்சியில் பிறப்புச்சான்றிதழ் பெற்றுத்தந்துவிடுவேன்.
மருத்துமனையில் பிறந்தது மாதிரி இல்லையேல் வீட்டில் பிறந்ததுமாதிரி சான்றிதழ் வாங்கித்தந்துவிடுவேன் என்று கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளதால் அதிகாரிகள் மேற்கண்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.