Skip to main content

ராசிமணலில் அணைக்கட்ட பூம்புகாரில் இருந்து செங்கற்களோடு புறப்பட்ட விவசாயிகள்

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 

காவிரிக்கு மாற்று காவிரியே என்கிற முழக்கத்துடன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கமும் ஒருங்கிணைந்து ராசிமணல் பகுதியில் அணைகட்ட வலியுறுத்தி காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் இருந்து செங்கல் எடுத்து செல்லும் விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளனர்.

 

r

 

ஜீன் மாதம் பத்தாம் தேதி பூம்புகாரில் கல்லெடுத்து சென்று 12 ம் தேதி ராசிமணலில் அணைக்கட்டப்போவதாக பி,ஆர்,பாண்டியன் அறிவித்திருந்தார். அதன்படியே பிரச்சாரத்தை துவங்கி இன்று திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக சென்று இரவு ஓக்கேனக்கல் பெரியார் மண்பத்தில் தங்குகின்றனர். இந்த வாகன பயணத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொது செயலாளர் பி,ஆர் பாண்டியன் தலைமை வகித்துவருகிறார்.

 

r

 

 வைத்தீஸ்வரன் கோயில் தருமபுரம் கட்டளை தம்பிரான் திருநாவுக்கரசு சுவாமிகள் அடிக்கல் நாட்டுவதற்காக கொண்டுசெல்லும் செங்கல்லை எடுத்து வழங்கி, பூஜை செய்து ஆசீர்வாதம் செய்து விவசாயிகள் கையில் கொடுத்தார். செங்கல்லை பெற்றுக்கொண்டு புறப்பட்ட பி.ஆர். பாண்டியன் கூறுகையில், " காவிரி நதியின் ஜீவாதார உரிமை பாதுகாக்கவும், மீட்கவுமே இந்த பயணம் தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். வருங்காலங்களில் குடிநீர் பஞ்சத்தை போக்க குளங்கள், கண்மாய்களை, முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் ராசிமணல் பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

r

 ராசிமணலில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் மிகுந்த பலன் அடைவார்கள். இந்த அணையை கட்ட மறைந்த முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டியது இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் ராசிமணலில் அணை கட்ட மறைந்த முதல்வர்கள் எம்,ஜி,ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளை தமிழக விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள். எனவே தமிழக விவசாயிகள் நலன் கருதி அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு ராசிமணலில் அணை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் டெல்டா மாவட்டம் காப்பற்றப்படும்." என்றார்.
 

சார்ந்த செய்திகள்