Skip to main content

கரோனா குணப்படுத்தலில் நம்பிக்கை தரும் ராணிப்பேட்டை!

Published on 21/06/2020 | Edited on 22/06/2020

 

 Ranipettai believes in Corona Healing

 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களை எல்லையாகக் கொண்டது புதியதாக உருவான இராணிப்பேட்டை மாவட்டம்.

 

முதல் லாக்டவுன் நேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லிக்குச் சென்று வந்தவர்கள், பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். தற்போது சென்னையில் இருந்து வந்தவர்களால் அதிகம் பரவ தொடங்கியது.

 

இதனால் சென்னையில் இருந்து யாரும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் நுழையாதபடி மாவட்ட எல்லையிலேயே செக்போஸ்ட் அமைத்துத் தடுக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் மேற்பார்வையில் செக்போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது.

 

இ-பாஸ் இருப்பவர்கள் மட்டும் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி அனுமதிக்கப்பட்டவர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். ஜீன் 20 ஆம் தேதி கணக்குப்படி மாவட்டத்தில் 333 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஜீன் 21ஆம் தேதி வாலாஜாவில் சிகிச்சை பெற்று வந்த 158 நோயாளிகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததன் அடிப்படையில் அவர்களைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு கபகசூர பவுடர், விட்டமின் சி மாத்திரை உட்பட மாத்திரைகளை வழங்கி அவர்களை அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

 

இந்த மாவட்டத்தில் இன்னும் 700க்கும் அதிகமானவர்கள் பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்கப்பட்டு முடிவுக்காகக் காத்துக்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்