Published on 01/03/2020 | Edited on 01/03/2020
ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு ராமநாதபுரத்தில் ரூபாய் 345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.