![trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/q_auBz7t7EkpbH2sgD7ogm-lyrFssBCFlOYYziDQ-1Y/1606738392/sites/default/files/2020-11/m22.jpg)
![trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ht7HPUqsmHEHnB5iJ2RyqezAzEok9tz69t0LXJs855o/1606738392/sites/default/files/2020-11/m21.jpg)
![trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/exQLOOdoKTq-P1RdL2fYEjWy_8xCpBhqsg2gyB-Fxk8/1606738392/sites/default/files/2020-11/m23.jpg)
Published on 30/11/2020 | Edited on 30/11/2020
முன் அனுமதி பெறாமல் பேரணி செல்ல முயன்ற, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கைதுக்குப் பயந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சியில், இன்று காலை 8 மணியில் இருந்து, இந்து முன்னணியின் பேரணி நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களைக் கைது செய்யக் காவல்துறையினர் மதியம் 12 மணி வரை காத்திருந்தனர்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்து முன்னணியைச் சேர்ந்த 8 பேர், ஆன்மிக அரசியலை ஆதரித்துப் பேரணி செல்ல முயன்றனர். பேரணி செல்ல முயற்சி செய்தவர்களை, காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்தபோது, நாங்கள் வீட்டிற்குச் செல்கிறோம் என்று கூறி ஒருவர் கூட கைதாகாமல், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பித்து ஓடியுள்ளார்கள்.