
எல்லாவற்றுக்கும் போராடக்கூடாது என்பதே ரஜினியின் நிலைப்பாடு என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாக தான் இங்கு இருக்கும் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும். ரஜினியும் போராட்டமே கூடாது என சொல்லவில்லை. இன்று காலை நான் அவரிடம் பேசினேன்.
அப்போது அவர் போராட்டமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் போராட்டத்தில் இது மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெறுகையில் அதனால் வழி அதிகமாக இருக்கிறது என அவர் என்னிடம் வருத்தத்தை தெரிவித்தார்.
போராட்டமே கூடாது என்றால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெற வேண்டும். நிச்சயமாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.