Published on 26/02/2021 | Edited on 26/02/2021

வன்னியர்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
நீண்ட நாட்களாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், இன்று தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி பேரவையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. எம்.பி.சி.யில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும், இதர பிரிவினருக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.