ரஜினிகாந்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. உணர்வுப் பூர்வமான போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என்றால் காவிரிக்காக போராடியவர்கள் சமூக விரோதிகளா? தொழில்கள் பாதிக்கும், வேலை வாய்பபுகள் பாதிக்கும் என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார். இதில் இருந்து அவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குகின்றன என்பது தெளிவாகிறது.
வேலை வாய்ப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமை. போராட்டம் என்பது மக்களின் உரிமை. அதனை தடுக்க முடியாது. சுதந்திர காலத்தில் இருந்தே மக்கள் போராடித்தான் பல உரிமைகளை பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.