Skip to main content

குற்றால சீசன் கொட்டுது அருவி... குளிப்பதற்குத் தடை!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

தென்காசி மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் இல்லாமல் போனதால் கடந்த வாரம் வரை வெயில் கொளுத்தியது. இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக தென்மேற்குப் பருவமழை அருகிலுள்ள கேரளாவில் கொட்டத் தொடங்கியதின் விளைவு, குற்றாலத்தில் இதமான சீதோஷ்ணம் குளிர்காற்று நிலவியது.

 

வானம் மேக மூட்டத்துடன் திரள குற்றாலமலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததின் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியது. நேற்றைய தினம் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் ஆனந்தமாகக் குளித்தனர். இந்நிலையில் தொடர் சாரல் மழை காரணமாக மெயினருவி மற்றும் ஐந்தருவிகளின் 5 பிரிவுகளிலும் தண்ணீர் வரத்து வெள்ளமாய் கொட்டியதால் மாலை 6 மணிக்குமேல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

 

மேலும் குற்றாலப் பகுதிகளில் உள்ள சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம், தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கியது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.களை கட்டுகிறது குற்றாலம்.

 

சார்ந்த செய்திகள்