




Published on 14/07/2021 | Edited on 14/07/2021
சென்னையில் நேற்று (13.07.2021) பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது. அதேபோல் லுப் கடற்கரை சாலையில் காலை முதலே மேக மூட்டமாக இருந்தது. மதியத்திற்குப் பின்பு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.