Published on 04/10/2018 | Edited on 04/10/2018

கடலூர் மாவட்டத்தில் 3-ந்தேதி இரவு முதல் 4-ந்தேதி பகல் வரை தொடர் மழை பெய்தது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. சிதம்பரத்தில் பாதள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடாததால் மழைநீர் பள்ளம் முழுவதும் நிறைந்து பள்ளம் இருப்பதே தெரியாமல் போனது. இதனால் கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சிதம்பரம் வழியாக சென்ற அரசு பேருந்து சிதம்பரத்தில் பள்ளத்தில் பேருந்தின் முன்சக்கரம் முழுவதும் சிக்கியது. இதேபோல் சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகம் அருகே புதுவையில் இருந்து நாகைக்கு சென்ற பேருந்தும், ஒரு லாரியும் பாதள சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. இதனால் பேருந்தில் சென்ற பயணிகள் அவதிக்குள்ளாகினர்.