

















அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று (13/09/2022) அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான கோடம்பாக்கம், புரசைவாக்கம், கீழ்பாக்கம், பூந்தமல்லி, ஷெனாய் நகர், மேத்தா நகர், அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் போன்ற இடங்களில் சோதனை நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய பொழுது அங்கு சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தன்னை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தை வீட்டிற்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
படங்கள் : ஸ்டாலின், அசோக்குமார், குமரேஷ்