Published on 18/01/2021 | Edited on 18/01/2021

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைப் பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து விழாவை கண்டுகளித்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக வரும் 23ம் தேதி மீண்டும் அவர் தமிழகம் வர இருக்கிறார். மேலும் அவர் மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.