கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. டிசம்பர் 1-ஆம் தேதி பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை ஐஐடி-யில் சில மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு முகாம்கள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தற்போதுவரை 191 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைகழகத்தில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்றைய தினம் (16.12.2020) ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு முகாம்களை பார்வையிட்டு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சமூக இடைவெளி முக கவசம் அணிதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கினார்.