Skip to main content

விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு



ஆம்பூர் அருகே உமராபாத்தை அடுத்து உள்ளது பாலூர். இந்த ஊரை சேர்ந்த சீனன் என்பவரது நிலத்தில் கடலைக்காய் சாகுபடி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது தொழிலாளி ஒருவர் கடலைக்காய் பிடுங்கிக் கொண்டு இருந்தபோது 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டார். அதனைப் பார்த்து திடுக்கிட்ட அவர், உடனடியாக கூச்சலிட்டார். பின்னர் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆம்பூர் வனச்சரகர் ஜெயபால் உத்தரவின் பேரில் வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர்கள் காந்தராஜ், ராமு ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன் நீண்ட நேரம் தேடி மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு மூலை கொல்லை வனப்பகுதியில் விடப்பட்டது.

-ராஜா

சார்ந்த செய்திகள்