Skip to main content

 ஊராட்சி அலுவலகத்தில் குறட்டைவிட்டு தூங்கிய பயனாளிகள்

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி 100 நாள் வேலை வழங்க கோரியும், செய்த வேலைக்கு சம்பளம் வழங்க கோரியும் பயனாளிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து குறட்டைவிட்டு தூங்கும் போராட்டம் மற்றும்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சுமார் 1,500  பேருக்கு மேல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளர்களாக பதிவு செய்து உள்ளனர்.  இவர்களுக்கு முறையாக வேலை வழங்குவது இல்லை. மேலும், பல நாட்கள் வேலை செய்த பயனாளிகள் பலருக்கும் சம்பளமும் வழங்கவில்லை.

 

h

 

இது குறித்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் தான் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பயனாளிகளின்  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறட்டை விட்டு தூங்கும் போராட்டம் நடத்தப்பட்டும் என்ற அறிவிக்கப்பட்டது.

 

இந்த போராட்டதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னால் மாவட்ட செயலாளர் த.செங்கோடன்,  ஒன்றியச் செயலாளர் ஜேசுராஜ்,  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் 300 -க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளர்கள் கலந்துகொண்டனர்.

 

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குறட்டைவிட்டு தூங்கும் போராட்டம் தொடங்கி நீண்ட நேரமாகியும் பேச்சுவார்த்தைக்கு  அலுவலர்கள் யாரும் வரவில்லை.  இதனால் விரக்தி அடைந்த போராட்டம் நடத்திய மக்கள்,  திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  அதன் பிறகு  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் கறம்பக்குடி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது..  நீர்நிலைகள் தூர்வாருதல்,  மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல், போன்ற பணிகள்  விரைவில் நடைபெறும்  என்றும்  நிலுவையில் உள்ள சம்பளம் உடனே வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.  அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. 


அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி பணிகளும், செய்த வேலைக்கான சம்பளமும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர். 

 

சார்ந்த செய்திகள்