Skip to main content

இளைஞர்களின் நீர்நிலை சீரமைப்பு பணிக்கு மதிப்பளித்து  ஆக்கிரமிப்பை விட்டு விலகும் விவசாயிகள்

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

 

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கீழே சென்ற நிலத்தடி நீரை மீண்டும் பல வருடங்களாக கண்டுகொள்ளப்படாமல் கிடந்த ஏரி, குளம், குட்டை, வரத்து வாய் கால்களை சீரமைக்கும் சீரிய பணிகளை அந்தந்த கிராம இளைஞர்கள் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். 

 

n

 

மழை பெய்யும் போதெல்லாம் அந்த இளைஞர்கள் முகத்தில் ஆனந்தம் தெரிகிறது. நாம் சீரமைத்த நீர்நிலை உயரும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற மகிழ்ச்சி தெரிகிறது. பல கிராமங்களில் தங்களின் சொந்த செலவில் நன்கொடைகளுடன் நீர்நிலைகளை சீரமைத்து மழைக்காக காத்திருக்கிறார்கள்.


   இந்த நிலையில்தான் நெடுவாசல் நெடுவாக்குளம் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ளது. இந்த ஏரியை தூர்வாரி வரத்து வாய்க்காலை சீரமைத்தால் காவிரித் தண்ணீரை கொண்டு வந்து ஏரியை நிரப்பலாம் என்று கடந்த மாதம் நீர்மேலாண்மைக்குழு தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

 

n

 

இந்த நிலையில் தான் ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளையும், வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றித் தரக்கோரி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு மனுக் கொடுத்தார்கள். கடந்த இரு நாட்களாக நெடுவாக்குளத்தை அக்கும்பணி நடக்கிறது. இதில் சுமார் 30 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


இந்தநிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கராசு ஆக்கிரமிப்பு அளக்கும் இடத்திற்கு வந்து அளவீட்டு எல்லைக் கல்லை நட்டவர் இது என்னிடம் உள்ள 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு. தண்ணீர் இருந்தால்தான் விவசாயம். தண்ணீர் இல்லாமல் என் சொந்த நிலமும் தரிசாக கிடக்கிறது. அதனால என்னிடம் உள்ள ஆக்கிரமிப்பை எடுத்துக் கொண்டு ஏரியை ஆழப்படுத்தி தண்ணீரை நிரப்பினால் என் பட்டா நிலத்தில் விவசாயம் செய்வேன். அதனால் ஆக்கிரமிப்பை விட்டு வெளியேறுகிறேன் என்று வெளியேறினார். 
  

 இதே போல தான் கடந்த மாதம் வேம்பங்குடி கிழக்கு பெரிய குளம் குடிமராமத்துப் பணி நடக்கிறது. இதிலும் பல ஏக்கர் ஆக்கிரமிப்பு உள்ளதை அதிகாரிகள் அளந்து வரையறுத்தனர். அப்போது மேற்பனைக்காடு வடக்கு பாஸ்கர் என்ற விவசாயி மல்லிகை, கரும்பு விவசாயம் செய்துள்ள 7 ஏக்கர்நீர்நிலை ஆக்கிரமிப்பை விட்டு வெளியேறுவதாக தானாக முன்வந்து கூறினார். 


இப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பிரச்சனையின்றி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தானாக முன்வந்து விட்டு வெளியேறுவது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  


இதே போல ஒவ்வொரு ஊரிலும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து விட்டு வெளியேறினால் வீணாகி கடலில் கலக்கும் மழைத் தண்ணீரை சேமித்து பயன்படுத்தலாம் நிலத்தடி நீரையும் உயர்த்தலாம். அடுத்த சந்ததிக்கு குடிக்க தண்ணீரையாவது கொடுக்கலாம்.  ஆக்கிரமிப்பாளர்கள் தான் மனது வைக்க வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்