புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர். நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தியும், மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்திடும் வகையிலும் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர் தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
மாவட்டத்தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பழனிசாமி,மாவட்டப்பொருளாளர் செந்தில்குமார், மாவட்டத்துணைத்தலைவர் ராஜாங்கம், அமைப்பு செயலாளர் முத்துக்குமார், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தலைவர் கோவிந்தராஜன், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தலைவர் நாடிமுத்து, கல்வி மாவட்ட செயலர் செந்தில்குமார், கல்வி மாவட்டப்பொருளாளர் நாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ், மகளிரணி செயலாளர் நாகலெட்சுமி, தகவல் தொடர்பாளர்கள் வீரமணி, ரகமத்துல்லா, வட்டார நிர்வாகிகள் மாரிமுத்து, பாரதிராஜா, கணேசன், தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்,
உள்ளிட்ட இந்நிகழ்வில் தோழமை சங்கத்தினரும் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டதாக அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
-இரா. பகத்சிங்