நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை
புதுக்கோட்டை 2-வது புத்தகத் திருவிழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இரண்டாமாண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழுக் கூட்டம் புதுக்கோட்டை அறிவியல் இயக்கக் கட்டிடத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் வரவேற்புக்குழுத் கவுரவத் தலைவராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.செந்திவேல்முருகன், தலைவராக தங்கம்மூர்த்தி, துணைத் தலைவர்களாக சீனு.சின்னப்பா, நா.முத்துநிலவன், இரா.சம்பத்குமார், டாக்டர் ராம்தாஸ், டாக்டர் சலீம், எல்.பிரபாகரன், சண்முகபழனியப்பன், குரு.தனசேகரன், கீர்த்திஜெய்சன், பேரா.விஸ்வநாதன், பேரா.கருப்பையா, செயலாளராக அ.மணவாளன், இணைச் செயலாளராக ஜீவி, ஆர்.ராஜ்குமார், ரமா ராமநாதன், புதுகை பூவண்ணன், சு.மதியழகன், ராசி.பன்னீர்செல்வன், எம்.ஸ்டாலின்சரவணன், பேரா.சு.மாதவன், மு.கீதா, மகா.சுந்தர், பேரா.நாகேஸ்வரன், பொருளாளராக ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வரவேற்புக்குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி பேசும்போது, கடந்த ஆண்டு குறுகிய காலத்தில் திட்டமிட்ட புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. குறைந்த அரங்குகளைப் பயன்படுத்தி ரூ.50 லட்சம் வரை புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு சற்று கூடுலான அரங்குளைப் பயன்படுத்தி விற்பனை இலக்கை இரண்டு மடங்காக்குவது, தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளை புத்தகத் திருவிழாவில் உரையாற்ற வைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடம் மாவட்ட பள்ளிக் கல்விதுறையும் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்துவதுற்கு சம்மதித்துள்ளது. எனவே, புத்தகத் திருவிழா குறித்த செய்திகளை மாவட்டம் முழுவதும் பரவலாகக் கொண்டு செல்வது, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு உண்டியல் வழங்குவது, சிறப்புத் தள்ளுபடிகளுக்கான டோக்கன் வழங்குவது, மாணவர்களுக்குத் தேவையான புத்தகப் பட்டியலை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் கொண்டு சேர்ப்பது, அனைத்துப்பள்ளிகளிலும் புத்தக வாசிப்பு இயக்கங்களை நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
எனவே, கடந்த ஆண்டைப்போல இந்த வருடமும் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெறுவதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கை, தொகை;காட்சி ஊடகங்கள் பெருமளவுக்கு ஆதரவுதர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
- பகத்சிங்