பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மக்களைத் தேடி பேரூராட்சி என்று திட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
கே.கே நகர் பகுதியில் எரியாத மின்விளக்குகள் திமுகவினர் குறை கேட்கச் சென்ற மறுநாளே 26 இடங்களில் பளிச்சென விளக்கு எரியத் தொடங்கியது. இந்த விஷயம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து திமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் வேகம் காட்டி வருகின்றனர். சுதாரித்துக் கொண்ட அதிமுகவினர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அதிகாரிகளை தேடி அதிமுக என்ற திட்டத்துடன் வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதியில் முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அது சார்ந்த பொதுமக்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகளை தேடிச் சென்று மனு கொடுக்கும் நிகழ்வை தொடங்கியுள்ளனர்.
காந்திநகர் பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கும் குறைந்த கிலோ வாட் டிரான்ஸ்பார்மரை அதிக கிலோ வாட் ட்ரான்ஸ்ஃபராக மாற்றி அமைத்து தர வேண்டும் என நகர அதிமுக நகர சிறுபான்மையின் அணி அமைப்பாளர் நாகூர் கனி தலைமையிலான அதிமுகவினர் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மக்களை நேரடியாக சந்திக்கும்போது எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தங்களை தயார்படுத்தி வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.