4 லட்சம் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க
எவ்வளது காலம் ஆகும்? ஐகோர்ட் கேள்வி
2018ம் ஆம் இறுதியில் ஆசிரியர் பயிற்சி முடித்து வெளியேறும் 4 லட்சம் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க எவ்வளது காலம் ஆகும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்சியை சேர்ந்த எஸ்.வி.ஐ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பி.எட், எம்.எட் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீநிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018ம் ஆண்டு முடியும்போது சுமார் 4 லட்சம் பேர் ஆசிரியர் பட்டம் பெற்று வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி கிருபாகரன், இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்தும், அடுத்து வரப்போகும் ஆண்டுகளில் எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக போகின்றன , அந்த பணியிடங்களுக்கு இவர்களில் எத்தனை பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் தனியார் கல்லூரிக்கு பி.எட், எம்.எட் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த நீநிபதி கிருபாகரன், இரண்டு வாரத்தில் கல்லூரியை ஆய்வு செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்பாகவும், அதில் படித்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கான வேலை வாய்ப்பு, தொடர்பாக ஏற்கனவே கேள்விகளை எழுப்பியும் அதற்கு அரசு பதிலளிக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- சி.ஜீவா பாரதி