இந்திய விவசாயத்தை அழிக்கக்கூடிய வகையில் நவம்பர் 4 ல் 44 நாடுகளின் மாநாட்டில் அந்நாடுகளின் விவசாய பொருட்கள் வரியின்றி நம் நாட்டில் இறக்குமதி செய்து கொள்ள பிரதமர் கையெழத்திட உள்ளார். இது இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட கூடாது என்று கோரி நவம்பர் 4 ல் கடலூர் தபால் நிலையம் முன்பு விவசாய சங்கத்தின் ஒன்றிய தலைவர் தோழர் ஆர் பஞ்சாசரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாவட்ட இனைசெயலாளர் ஆர் கே சரவணன் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் எம் வெங்கடேசன் அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் கே முருகன் தலைவர் பி காந்தி நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் பி ராமானுஜம் ஆலப்பாக்கம் பகுதி தலைவர் என் ஆர் ரமேஷ் பொருளாளர் சாரங்கபாணி கரும்பு விவசாய சங்கத் தலைவர் எம் மணி, ஆர் தென்னரசு மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம் கடவுள், லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.