Published on 04/08/2018 | Edited on 04/08/2018

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை கண்டித்து, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலை கடத்தல் வழக்குகளை நீர்ந்து போக செய்யும் வகையில் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இந்து சமய அறநிலையத்துறையினை கலைக்க வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சதி செய்து வருவதாகவும், சிலை கடத்தலில் கோவில் அர்ச்சகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறிய அவர்கள், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.