Skip to main content

கர்ப்பிணியும் சிசுக்களும் உயிரிழக்க பரோட்டா காரணமா? 

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

Is Prota the cause of death in pregnant women

 

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய நிலையில், 5 மாத கர்ப்பிணி அனந்தாயி மற்றும் அவருடைய வயிற்றிலிருந்த சிசுக்கள் திடீர் மரணமடைந்தது, அருப்புக்கோட்டை அருகிலுள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சங்கன் – அனந்தாயி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. அடுத்து கர்ப்பமுற்றிருந்த அனந்தாயிக்கு இரவு நேர உணவாக, வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கடையிலிருந்து சங்கன் பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளார். சாப்பிட்டதும் அனந்தாயிக்கு வாந்தி, குமட்டல் வர, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அனந்தாயி மரணமடைந்துள்ளார்.

 

திருமணமான மூன்றரை ஆண்டுகளுக்குள்ளாக மரணம் ஏற்பட்டுள்ளதால், அனந்தாயி இறப்பு குறித்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், டி.எஸ்.பி. மதியழகன் (பொறுப்பு) ஆகியோர் உறவினர்களிடம் விசாரணை செய்தனர்.  

 

பரோட்டா சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தது, கடலூர் மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளி தூங்கும்போது உயிரைவிட்டது என மரணங்களின் பின்னணி குறித்து சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பிய நிலையில், அனந்தாயி மரணமும் பீதி கிளப்புவதாக இருக்கிறது. ஆனாலும், உடற்கூறாய்வுக்குப் பின் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே, ‘ஃபுட் பாய்ஸனிங்’ காரணமா அல்லது வேறெதுவும் காரணமா என்பது தெரியவரும். 

 

 

சார்ந்த செய்திகள்