Published on 19/02/2023 | Edited on 19/02/2023
வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த பேராசிரியர் க.அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இனமானப் பேராசிரியர் அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் நேற்று (18-02-2023) உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பேராசிரியரைப் போலவே என் மீது மிகுந்த அன்புகொண்டு பழகக் கூடியவர் மணிவண்ணன். அவரை இழந்து வாடும் பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழகத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மணிவண்ணன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.