Skip to main content

பிரதம மந்திரி திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளில் நிதி மோசடி!

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
 பிரதம மந்திரி திட்டத்தில் கட்டப்பட்ட 
கழிவறைகளில் நிதி மோசடி!



புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன்பட்டியில் பிரதமர் மந்திரி திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கிராம பகுதிகள் சுகதாரமாக இருக்க, தூய்மை இந்தியா திட்டத்தின் படி அனைத்து கிராம பகுதிகளில் இலவச கழிப்பறை அமைக்க, மத்திய அரசு மூலம் பிரதம மந்திரி திட்டத்தில் (எஸ்.பி.எம்.,) இலவசமாக வீட்டிற்கு ஓரு கழிவறை கட்ட மத்திய அரசு ரூ12 ஆயிரம் நிதி வழங்கி வருகிறது. இதன்படி, புதுகை மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் பல நுhற்றுக்கனக்கான கழிவறைகள் கட்டி பல லட்சம் நிதி மோசடி நடப்பதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தின் படி, அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உதவியுடன் சில ஒப்பந்தகாரர்கள் பல கிராமங்களில் கழிவறைகள் கட்டி வருகின்றனர். இதில், 7 ஆயிரம் வரை மதிப்பிலான கழிவறைகள் தான் கட்டப்படுகின்றன. இது தரமற்றதாக இருக்கிறது. என பயணாளிகள் புகார் கூறிவருகின்றனர்.

இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த கணேசன் கூறியதாவது: 
கறம்பக்குடி ஊராட்சி ஓன்றியத்திற்குட்பட்ட கணக்கன்காடு ஊராட்சி மறவன்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ12 ஆயிரம் மதிப்பில் 3அடி ஆழம், 3அடி அகலத்தில் 3 சிமெண்ட உரை மூலம் 2 செப்டிடேங் அமைத்து, நல்ல தரமாக கட்ட மத்திய அரசு நிதி அளிக்கிறது. இதற்கான பணத்தை எங்களது, வங்கி கணக்கில் வரவு வைத்தால், நாங்களே நல்ல தரமான கழிவறைகள் கட்டுவோம். அப்படி செய்யாமல் ஊராட்சி ஓன்றிய அலுவலகம் மூலம் இலவச கழிவறைகள் கட்டப்படுவதால், அதிகாரிகள் துணையோடு சில ஒப்பந்தகாரர்கள் 1அடி ஆழத்தில் 1 செப்டிடேங் அமைத்து, கழிவறைகளை பெயரளவுக்கு கட்டி நிதிகளை மோசடி செய்கின்றனர். இந்த கழிவறைகளை ஒரிரு நாட்கள் கூட பயன்படுத்த முடியாத, அவல நிலையில்; கட்டப்பட்டுள்ளன. இது போன்ற முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

இது குறித்து, கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் ஆறுமுகம் கூறியதாவது:
இது பற்றி விசாரணை செய்யப்படும். தவறு நடந்திருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
  
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்