Skip to main content

குடியரசுத் தலைவர் தேர்தல் - பா.ஜ.க. மேலாண்மை குழுவில் வானதி! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022
Presidential Election - BJP Heaven on the management team!

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24- ஆம் தேதி அன்று முடிகிறது. இந்த நிலையில், அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 15- ஆம் தேதி மனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், ஜூன் 29- ஆம் தேதி அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 

 

மனுக்களைத் திரும்பப் பெற வரும் ஜூலை மாதம் 2- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவைத் தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் 21- ஆம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை அறிவிக்க ஆளும் பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை முன்னிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். 

 

இந்த நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக 14 பேர் கொண்ட மேலாண்மைக் குழுவை அமைத்தது பா.ஜ.க. மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான குழுவில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, அஷ்வினி வைஷ்ணவ், சர்பானந்தா சோனோவால், அர்ஜுன் ராம் மேக்வால், பாரதி பவார், கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் தருண், கட்சியின் தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா, கட்சியின் தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மக்களவை உறுப்பினர் ராஜ்தீப் ராய், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பற்றா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

 

அதேபோல், குழுவில் சி.டி.ரவி., வினோத் தாவ்டே உள்ளிட்டோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்