அமைச்சர் பொங்கல் பரிசு வழங்கிய விழாவில் சலசலப்பு
அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள நியாய விலைக்கடைகளில் அன்புநகர் மற்றும் கிழக்குதெரு பகுதிகளில் தமிழக அரசு சார்பாக இலவச பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி, சேலைகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். கிழக்கு தெரு 3வது வார்டில் உள்ள 3ம் எண் நியாய விலைக்கடையில் 700க்கும் மேற்ப்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அமைச்சர் மணிகண்டனிடம் இந்த கடையில் தமிழக அரசு பொருட்களை முறையாக வழங்குவதில்லை, மேலும் இரவு நேரங்களில் இங்குள்ள பொருட்களை கடத்துவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அமைச்சர் நியாய விலைக்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை பெற 500க்கும் மேற்ப்பட்டோர் வந்திருந்தனர் ஆனால் 30 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கியுள்ளனர். இதனால் தங்களுக்கு கிடைக்காது என்று அதிகாரிகளை அப்பகுதி முற்றுகையிட்டனர். உடனடியாக அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர். உங்கள் அனைவருக்கு இலவச பொருட்கள் கிடைக்கும் அப்படி கிடைக்காவிட்டால் எங்களது தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர் இதனால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கியது.
-பாலாஜி